close
Choose your channels

விஜய் கட்சியின் சின்னம் இதுவா? மொத்தமா ஓட்டை அள்ளிருவாரு போல..!

Wednesday, February 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் அவரது கட்சிக்கு எந்த சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து முடித்துவிட்டு தீவிர அரசியலில் விஜய் இறங்க இருப்பதாகவும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் எப்படி ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு மக்களை தன் வழிக்கு கொண்டு வரப் போகிறார் என்பதை பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில் விஜய் குறி வைப்பது வேறு எந்த கட்சியின் வாக்குகளையும் அல்ல என்றும், புதிதாக வாக்களிக்க போகும் வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளை தான் என்றும் கூறப்பட்டு வருகிறது. அதற்காகத்தான் அவர் 10, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் என்பதும் 2026 ஆம் ஆண்டு அவர்கள் அனைவரும் வாக்களிக்க தகுதியானவர்களாக ஆகிவிடுவார்கள் என்பதால் இளைஞர்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் அவருக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சின்னமாக கல்வி சம்பந்தப்பட்ட சின்னத்தைக் கேட்க இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக புத்தகம், பேனா உள்ளிட்ட சின்னங்களை கேட்டு வாங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டும் நடந்தால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஒட்டுமொத்த வாக்குகளை அவர் அள்ளிவிடுவார் என்று கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.