close
Choose your channels

விஜய்சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தகவலை வெளியிட்ட படக்குழுவினர்!

Thursday, November 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் சேதுபதி நடித்த ’லாபம்’, ’அனபெல் சேதுபதி’ மற்றும் ’துக்ளக் தர்பார்’ ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் ஒன்றின் ரிலீஸ் தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

விஜய் சேதுபதி நடிப்பில் வெங்கடகிருஷ்ணன் ரோக்நாத் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது இந்த படம் டிசம்பர் மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மிக விரைவில் இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தின் டீசர், டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படம் விஜய் சேதுபதிக்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ்திருமேனி, விவேக், ரித்விகா, மோகன்ராஜா, கரு பழனியப்பன், சின்னி ஜெயந்த், வித்யா பிரதீப் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை இசக்கி துரை தயாரித்துள்ளார். நிவாஸ் பிரசன்னா இசையில், வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில், ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.