close
Choose your channels

விஜய்சேதுபதி-நயன்தாரா படத்தின் படப்பிடிப்பு முடிந்தது: ரிலீஸ் எப்போது?

Monday, December 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, நயன்தாரா முதன்முதலில் இணைந்து நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து நடித்த படம் 'இமைக்கா நொடிகள்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

அதர்வா முக்கிய கேரக்டரிலும் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணாவுடம் நடித்துள்ள இந்த படத்தில் அனுராக் காஷ்யப் படத்தின் திருப்புமுனையை ஏற்படுத்தும் வேடத்தில் நடித்துள்ளார். 'டிமாண்டி காலனி' இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஆரம்பமாகும் என்றும், வெகுவிரைவில் டிரைலர், பாடல்கள் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்படுவதோடு, ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.