close
Choose your channels

விஜய்சேதுபதி பட டைட்டிலில் இடம்பிடித்த 'துக்ளக்'

Tuesday, February 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சீனுராமசாமியின் 'மாமனிதன்' படத்தில் நடித்துமுடித்துவிட்டு தற்போது 'ஸ்கெட்ச்' பட இயக்குனர் விஜய்சந்தர் இயக்கி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் தயாரிப்பாளர் ஆறுமுககுமாரின் அடுத்த படமான 'லாபம்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருடைய இன்னொரு படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' படத்தை விநியோகம் செய்த நிறுவனமான '7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ' நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'துக்ளக்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.