close
Choose your channels

உழைப்பாளர் தினத்தில் உண்மையான உழைப்பாளருக்கு மரியாதை செய்த விஜய்சேதுபதி: வைரல் புகைப்படம்!

Saturday, May 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று மே ஒன்றாம் தேதி என்பதால் உலகம் முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் உழைப்பாளர் தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கமல்ஹாசன் உள்பட தமிழ் திரையுலகினர்களும் சிலர் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விஜய் சேதுபதி சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் சமீபத்தில் மறைந்த இயக்குனர் ஜனநாதன் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் காட்சி உள்ளது.

விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் உள்பட ’லாபம்’ படக்குழுவினர் அனைவரும் உழைப்பாளர் தினத்தில் உண்மையான உழைப்பாளரும் கம்யூனிஸ்ட்வாதியுமான இயக்குனர் ஜனநாதன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஜனநாதன் இயக்கத்தில் உருவான ’லாபம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.