close
Choose your channels

ஹீரோவாகும் விஜய் சேதுபதி மகன்.. டைட்டில் போஸ்டர் ரிலீஸ்..!

Friday, November 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர்களின் வாரிசுகள் திரையுலகில் என்ட்ரி ஆகி வரும் நிலையில் சமீபத்தில் தளபதி விஜயின் மகன் இயக்குனராக அறிமுகமாக இருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் மகன், சூர்யா விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கும் தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா, குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது ஹீரோவாக நடிக்க இருக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

’பீனிக்ஸ் வீழான்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யா விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் சிஎஸ் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில், பிரவீன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ராஜலட்சுமி அரசகுமார் என்பவர் தயாரிக்க இருக்கிறார்.

இன்று இந்த படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தில் நடிக்கும் நாயகி உட்பட மற்ற நட்சத்திரங்களின் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.