close
Choose your channels

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் சிம்பு நாயகி

Sunday, October 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2016ஆம் ஆண்டின் வெற்றி நாயகன் விஜய்சேதுபதி நடித்த ஆறு படங்கள் இதுவரை வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது. மேலும் 'மெல்லிசை' மற்றும் 'இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்கள் இந்த ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 'ரேணிகுண்டா' இயக்குனர் பன்னீர்செல்வம் இயகக்த்தில் விஜய்சேதுபதி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதையயும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்திசுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக மஞ்சிமா மோகன் நடிப்பார் என்று கூறப்படுகிறது. சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' நாயகி மஞ்சிமா விரைவில் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்சன் எண்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.