close
Choose your channels

அமெரிக்காவில் FDFS படம் பார்த்த விஜய்.. ஃபேன் பேயாக மாறி செய்த அலப்பறை..!

Saturday, September 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் திரைப்படங்கள் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து திரையில் விஜய் தோன்றும் போது அலப்பறை செய்வார்கள். அதேபோல் தற்போது அமெரிக்காவில் உள்ள தளபதி விஜய் அங்கு பிரபல நடிகர் நடித்த திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்த்து தியேட்டரில் அலப்பறை செய்த புகைப்படத்தை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தற்போது ’தளபதி 68’ திரைப்படத்தின் பணிகளுக்காக விஜய், லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார் என்பது தெரிந்ததே. அங்குள்ள டெக்னாலஜி ஸ்டுடியோ ஒன்றில் ஃபுல்பாடி ஸ்கேனர் மற்றும் சில டெக்னிகல் பணிகளுக்காக விஜய் சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் ’The Equalizer 3’ என்ற படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்த்தார். அதுவும் இந்த படத்தின் கதாநாயகன் திரையில் தோன்றும் போது, விஜய் அவருடைய ஃபேன்பாய் மோடுக்கு மாறி படம் ஓடிக் கொண்டிருந்த போது எழுந்து நின்று கைதட்டி உள்ளார்.

இதை புகைப்படம் எடுத்துள்ள ’தளபதி 68’ தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் இந்த போட்டோவை அவரது ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.