close
Choose your channels

விஜயகாந்த் மகன் எனக்கும் மகன் தான்.. ஒரே தொகுதியில் போட்டியிடுவது குறித்து ராதிகா..!

Monday, March 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் மற்றும் நடிகை ராதிகா ஆகிய இருவரும் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நிலையில் 'விஜயகாந்த் மகன் எனக்கும் மகன் போல தான்’ என்று ராதிகா பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்த சரத்குமார் சமீபத்தில் தனது கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்துள்ளார். இதையடுத்து அவருக்கு ஒரு சீட் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார் என்பதும் அந்த தொகுதி தான் விருதுநகர் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதே தொகுதியில் தான் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அதிமுக கூட்டணியின் சார்பில் தேமுதிக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இது குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேட்டியில், ‘விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் என்னுடைய பொண்ணு உடன் படித்தவர், எனக்கும் அவர் மகன் போல தான், சின்ன பையன் அவர் நன்றாக இருக்க வேண்டும்’ என்று கூறினார்.

மேலும் இந்த தொகுதியில் தற்போது எம்பி யாக இருக்கும் மாணிக் தாகூர் தொகுதிக்கு சரிவர வரவில்லை என்று நான் போகும் இடங்கள் எல்லாம் சொல்கிறார்கள் என்று ராதிகா தெரிவித்தார். அது மட்டுமின்றி விருதுநகர் எங்களுக்கு புதிது இல்லை, காமராஜருக்கு மணிமண்டபம் நாங்கள் தான் கட்டிக் கொடுத்தோம், எங்கள் உறவினர்கள் எல்லாம் விருதுநகரில் தான் இருக்கிறார்கள் என்று கூறிய ராதிகா, விருதுநகரில் செய்வதற்கு நிறைய இருக்கிறது என்றும் நிறைய திட்டங்கள் என்னிடம் உள்ளது என்றும் நான் எம்பி ஆனால் விருதுநகருக்கு நல்லது செய்வேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் ஜோடியாக நடித்துள்ள நிலையில் விஜயகாந்த், பிரேமலதாவை திருமணம் செய்தும், ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்தும் செட்டில் ஆகிவிட்டனர். இந்த நிலையில் விஜயகாந்த் மகனும் ராதிகாவும் நேருக்கு நேர் ஒரே தொகுதியில் போட்டியிடும் வகையில் செய்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.