close
Choose your channels

விக்ரமின் 'சியான் 62' படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Thursday, March 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடித்து முடித்துள்ள ’துருவ நட்சத்திரம்’ மற்றும் ’தங்கலான்’ ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்தை அதாவது ’சியான் 62’ படத்தை ’சித்தா’ படத்தை இயக்கிய அருண்குமார் இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் ஷிபுதமீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் மலையாள நடிகர் சுராஜ் என்பவர் இந்த படத்தில் இணைந்தார் என்பதும் மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் இந்த படத்தில் இணைந்ததை அடுத்து இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் என்று சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ’அழகர்சாமியின் குதிரை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகி அதன்பின் ’தரமணி’ ’நாச்சியார்’ ’மேற்கு தொடர்ச்சி மலை’ ’பேரன்பு’ ’மாமன்னன்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது விக்ரமின் ‘சியான் 62’ படத்திலும் ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமானதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.