close
Choose your channels

'விக்ரம்' படத்தில் விஜய்சேதுபதி ஜோடி ஷிவானி அல்ல, இந்த நடிகைதான்: அவரே கூறிய தகவல்!

Monday, December 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ’விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது என்பதும், இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சரத் மற்றும் கிருத்திகா சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் யோகேஷ் மற்றும் மைனா ஜோடி இரண்டாவது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் மைனா பேசியபோது, ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியால் நான் பிரபலமாகி விட்டேன் என்றும் குறிப்பாக ’விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன் என்றும் அதேபோல் கார்த்தி நடிக்கும் ’விருமன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

’விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மைனா நடிப்பது உறுதியாகி உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.