close
Choose your channels

சியான் விக்ரமின் 'இருமுகன்' படத்தின் தெலுங்கு டைட்டில் இதுதான்

Friday, July 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இர்னடு வித்தியாசமான வேடங்களில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'இருமுகன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் நேற்று சிங்கப்பூரில் நடைபெற்ற SIIMA விருது வழங்கும் விழாவில் இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் மற்றும் டீசர் வெளியானது.
இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் 'Inkokkadu' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதே விழாவில் இந்த படத்தின் தெலுங்கு டீசரும் வெளியானது. இந்த டீசரை டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி வெளியிட்டார்.
விக்ரம், நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேரும் இந்த படத்தில் நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, பாலா, மனோ, பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பும் செய்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.