close
Choose your channels

இன்று எலிமினேஷன் ஆகும் சரவணன் விக்ரமுக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

Sunday, December 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை தாண்டிவிட்ட நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் இறுதிப் போட்டிக்கு போட்டியாளர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த வாரம் விசித்ரா, ரவீனா மற்றும் விக்ரம் சரவணன் ஆகிய மூன்று போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்த நிலையில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் சரவணன் விக்ரம் வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது

டைட்டில் வின்னர் என்ற கனவுடன் இருந்த சரவணன் விக்ரம் வெளியேறுவது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இனி அடுத்தடுத்து ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இன்று வெளியேறும் சரவணன் விக்ரம் சுமார் 15 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரவணன் விக்ரமுக்கு தினமும் 18,000 சம்பளம் பேசப்பட்டதாகவும் அவர் 84 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததால் அவருக்கு 15 லட்சத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.