close
Choose your channels

கமல், ரஜினியை அடுத்து சட்டமன்ற தேர்தலில் குதிக்கும் பிரபல ஹீரோ: தனிக்கட்சியா?

Saturday, December 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் அரசியல் ஆளுமைகளாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் அடுத்தடுத்து காலமானதை அடுத்து ஆளுமைக்கான வெற்றிடம் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப ஏற்கனவே கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தனித்தனியாக அரசியல் களத்தில் குதித்துள்ளனர். இவர்கள் இருவரும் வரும் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நடிகர் விஷாலும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர் தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிட போகிறாரா அல்லது அவர் மட்டும் தனியாக எம்.எல்.ஏ பதவிக்காக போட்டியிட போகிறாரா என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது

நடிகர் விஷால் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவரது அரசியல் பிரவேசம் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன

வரும் தேர்தலில் ஏற்கனவே அதிமுக, திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிடவுள்ள நிலையில் புதிதாக கமல், ரஜினி, விஷால் ஆகியோர் களமிறங்கவிருப்பதால் வித்தியாசமான தேர்தல் களமாக இருக்கும் என கருதப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.