close
Choose your channels

காயத்ரி, டயானா, ரிஷிட், ரீனா, கிம்.. 'துப்பறிவாளன் 2' அப்டேட் கொடுத்த விஷால்..!

Monday, April 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷால், இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள ’ரத்னம்’ என்ற படத்தில் நடித்த முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் நடித்து இயக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் பணியில் உள்ளார் என்பதும் சமீபத்தில் கூட அவர் வெளிநாடு சென்று லொகேஷன் பார்க்கும் பணியில் இருந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இது குறித்த அப்டேட்டை விஷால் தனது சமூக வலைதளத்தில் கொடுத்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

நான் இயக்குனராக அறிமுகம் ஆகும் ’துப்பறிவாளன் 2’ படத்தின் லொகேஷன் பணிக்காக லண்டன் மற்றும் அஜர்பைஜான் சென்று, எனது பணியை முடித்துவிட்டு துபாய் வழியாக இந்தியா வந்து கொண்டிருந்தேன். கடந்த இரண்டு வாரங்களில் உற்சாகமாக வேலை பார்த்த நிலையில் இந்தியா திரும்பும் போது விமானத்தில் அழகான விமான பணிப்பெண்களிடம் இருந்து எனக்கு கிடைத்த ஆசீர்வாதத்திற்கு மிக்க நன்றி.

காயத்ரி, டயானா, ரிஷிட், ரீனா, கிம் ஆகிய விமான பணிப்பெண்கள் எனது நாளை உற்சாகம் ஆக்கினார்கள். எனக்கு அவர்கள் கொடுத்த குறிப்புகள் மற்றும் சாக்லேட்டுகள் என் மனதை நிறைவடை செய்துள்ளது. எனது படத்தில் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற நிச்சயமாக கடுமையான உழைப்பேன், கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். சென்னை வந்து சேர்ந்தேன்’ என்று கூறிய விஷால் வரும் 26ஆம் தேதி ’ரத்னம்’ படம் ரிலீஸ் ஆகிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

விஷாலின் இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.