close
Choose your channels

16 பேரையும் அடிப்பேன்: 'வீரமே வாகை சூடும்' படத்தின் மாஸ் ஸ்னீக்பீக் வீடியோ

Monday, January 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் இரண்டு நிமிட ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் மாரி என்பவரை தேடி விஷால் வரும் போது அங்கிருக்கும் 16 பேர்கள் மாறி மாறி ’மாரி’ இவர்தான் என்று கூறி வருகின்றனர். அதன் பின்னர் பொறுமையை இழக்கும் விஷால், ‘ இங்கிருக்கும் 16 பேர்களில் ’மாரி’ தானாக முன்வந்து ஒப்புக் கொள்ளாவிட்டால் 16 பேரையும் அடிப்பேன் என்று கூறுவதும் அதன்பின் மாஸ் ஸ்டண்ட் காட்சி இடம்பெறுவதும் இந்த ஸ்னீக்பீக் வீடியோவில் உள்ளன. இந்த வீடியோ படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி உள்ளது .

விஷால் ஜோடியாக டிம்பிள் ஹையாத்தி நடித்துள்ள இந்த திரைப்படத்தில் யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். து.பா சரவணன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், கவிராஜ் ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.