close
Choose your channels

நடிகர் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். முழுவிபரம்

Monday, November 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு கூட்டம் ஒருசில சிறு சலசலப்புடன் நேற்று முடிவடைந்தது. கருணாஸ் கார் உடைப்பு, விஷால் அலுவலகம் தாக்குதல் போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தாலும் பொதுக்குழு அமைதியாக முடிவடைந்தது. இந்நிலையில் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தற்போது பார்ப்போம்
1. பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டும் அதுபற்றி பலமுறை கேட்டும் எந்த விளக்கமும் அளிக்காமல் இருக்கும் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் செயற்குழுவால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்கள்.
2. சங்க உறுப்பினர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது. மேலும் வயது வரம்பும் தளர்த்தப்படுகிறது.
3. சங்கத்தோடு எந்த தொடர்பும் இல்லாத 67 உறுப்பினர்களும் அவர்கள் தங்களுடைய உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பாக பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கவேண்டும். அதன்பிறகும் அவர்கள் புதுப்பிக்க வில்லை என்றால் சங்கத்தை விட்டு நீக்கப்படுவர்.
4. சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. சிஎம்டிஏ அனுமதி கிடைத்ததும் டெண்டர் விடப்பட்டு கட்டிட பணி தொடங்கப்படும். 3 வருட காலத்திற்குள் கட்டிடம் முழுமையாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
5. சங்க அறக்கட்டளை விதிமுறைகளில் திருத்தம் செய்து தங்களை நிரந்தர அறங்காவலர்களாக நியமித்துக் கொண்ட முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் அறக்கட்டளையில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
6. சங்கத்தின் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், சங்க விதிகளுக்கு முரணாகவும், எதிராகவும் நடப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
7. தற்போது சங்கத்தில் 8.5 கோடி ரூபாய் இருப்பில் உள்ளது. மேலும், கட்டடம் கட்ட நிதி திரட்ட திரைப்படம் தயாரிப்பாது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் முயற்சிக்கப்படும்.
மேற்கண்ட தீர்மானங்கள் சங்க உறுப்பினர்களின் பேராதரவுடன் நிறைவேற்றப்பட்டது.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.