close
Choose your channels

'வேதாளம்' பாதிப்பில் உருவாகிறது 'துப்பறிவாளன்' : மிஷ்கின்

Friday, June 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள 'துப்பாறிவாளன்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மிஷ்கின், தான் ஆங்கில எழுத்தாளர் ஷெர்லாக் ஹோம்ஸ் உருவாக்கிய கேரக்டர்கள் மற்றும் ஸ்பைடர்மேன், துப்பறியும் சாம்பு, அம்புலிமாமா கதையில் வரும் கேரக்டர்கள் மற்றும் விக்ரமாதித்தன், வேதாளம் ஆகிய கேரக்டர்களை மிகவும் ரசிப்பதாகவும், இவர்கள் அனைவரும் சாதாரண மனிதர்களை விட சக்தி வாயந்தவர்கள் என்றும் இப்படியான ஒரு பவர்புல் கேரக்டர்களின் பாதிப்புதான் துப்பறிவாளன் படத்தின் விஷால் கேரக்டர் என்றும் தெரிவித்துள்ளார்.
விஷால், ராகுல் ப்ரித்திசிங் நடிக்கும் 'துப்பறிவாளன்' படத்திற்கு அரோல் கரோலி இசையமைக்கின்றார். விஷாலின் 'விஷால் பிலிம் பேக்டரி' தயாரிக்கும் இந்த படம் நிச்சயம் விஷால், மிஷ்கின் இருவருக்குமே திருப்புமுனையை தரும் படமாக அமையும் என கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.