close
Choose your channels

அடுத்த பாய்ச்சலுக்கு கிளம்பிவிட்டாரா கணியன் பூங்குன்றனார்? விஷால் கொடுத்த சூப்பர் அப்டேட்..!

Tuesday, January 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவான ’ரத்னம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக இன்று காலை விஷால் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது அடுத்த பட அப்டேட்டை அறிவித்துள்ளார்.

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’துப்பறிவாளன்’. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது வசூலிலும் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து விஷாலே இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் ’துப்பறிவாளன் 2’ திரைப்படத்தின் ஸ்டில் ஒன்றை விஷால் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து அவர் ’துப்பறிவாளன் 2’ படத்தை இயக்கும் பணியை அவர் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ’துப்பறிவாளன்’ திரைப்படத்தில் கணியன் பூங்குன்றனார் என்ற கேரக்டரில் விஷால் நடித்திருந்த நிலையில் அவர் அடுத்த பாய்ச்சலுக்கு கிளம்பி விட்டார் என்று இந்த அறிவிப்பில் இருந்து தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.