close
Choose your channels

'விக்ரம்' படத்தில் நடித்ததற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறவில்லை: சொன்னது யார் தெரியுமா?

Monday, January 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படத்தில் நடித்ததற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என வில்லேஜ் குக்கிங் சேனல் சுப்பிரமணியம் பேட்டி அளித்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’விக்ரம்’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், 300 கோடி ரூபாய்க்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் நடித்திருப்பார்கள் என்பதும் அந்த காட்சி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த வில்லேஜ் குக்கிங் சேனலின் சுப்பிரமணியன் அவர்கள் ’விக்ரம்’ படத்தில் நடித்ததற்காக நாங்கள் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்றும் விளம்பரங்களுக்காக எந்த தொகையும் பெறக்கூடாது என நாங்கள் சேனல் தொடங்கும்போதே முடிவு செய்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த முடிவை தற்போது வரை நாங்கள் பின்பற்றி வருகிறோம் என்றும் பிரபல சாக்லேட் நிறுவனம் ஒன்று 10 வினாடி விளம்பரத்திற்கு 4.5 லட்சம் தருகிறோம் என்று சொன்னதை கூட நாங்கள் நிராகரித்து விட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.