close
Choose your channels

சமந்தா படங்களில் நடிப்பதை குறைத்தது ஏன்?

Saturday, September 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டு சமந்தா நடித்த ஐந்து படங்கள் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. அவற்றில் 'தெறி' மற்றும் '24' ஆகிய தமிழ் படங்களும் அடங்கும்.
இந்நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 30 படங்களில் நடித்துள்ள சமந்தாவின் கையில் தற்போது ஒரு படம் கூட இல்லை. சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கவுள்ள படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பினும் இந்த படம் அடுத்த வருட இறுதியில்தான் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமந்தாவின் திருமணம் நெருங்குவதால்தான் அவர் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டதாக கூறப்படும் நிலையில் நல்ல கேரக்டர் கிடைக்காததால்தான் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றும் இதை நான் மனவருத்ததுடன் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
விஜய், விக்ரம், சூர்யா, மகேஷ்பாபு, பவன்கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் சமந்தா கிட்டத்தட்ட கிளாமர் ரோல்களில் மட்டுமே நடித்துள்ள நிலையில் இனிமேல் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அவரது சமீபத்திய பேட்டியும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.