close
Choose your channels

தனுஷ்-அனிருத் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

Tuesday, April 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

D&A என்று கூறப்பட்ட தனுஷ்-அனிருத் கூட்டணிக்கு தொடர்ச்சியாக மிகப்பெரிய வெற்றி கிடைத்து வந்தது.  ஒய் திஸ் கொலைவெறி பாடல் இடம்பெற்ற 3 படத்தில் தொடங்கி மாரி, விஐபி, தங்கமகன் என தனுஷ் படங்களுக்கு அனிருத் தொடர்ச்சியாக இசையமைத்தார்.

அதேபோல் தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல், காக்கி சட்டை, நானும் ரெளடிதான் ஆகிய படங்களிலும் அனிருத் ஒரு ஹீரோ போலவே புகழப்பட்டார்.

இந்த நிலையில் தனுஷ் மற்றும் அனிருத்துக்கு இடையே திடீரென கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து தனுஷ் நடித்த 'விஐபி 2; உள்பட ஒருசில படங்களுக்கு அனிருத் இசையமைக்கவில்லை

இந்த நிலையில் சமீபத்தில் தனுஷூக்கும் தனக்கும் எந்தவித கருத்துவேறுபாடும் இல்லை என்றும் அடுத்த ஆண்டு மீண்டும் நாங்கள் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவோம் என்றும் அனிருத் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது தனுஷ் மற்றும் அனிருத் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.