close
Choose your channels

இது கருடனுக்கும் நாகருக்கும் நடக்கும் யுத்தம்: யோகிபாபுவின் 'கஜானா' டிரைலர்..!

Friday, March 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும், அவர் ஹீரோவாக நடிக்கும் சில படங்கள் நல்ல வெற்றியை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படங்களில் ஒன்று ’கஜானா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

ஒரு மர்மமான காட்டுக்கு செல்லும் குழுவினர் அங்கு நடக்கும் சில வித்தியாசமான சம்பவங்களை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் அவர்களுக்கு வனவிலங்குகளால் ஏற்படும் ஆபத்து, அந்த ஆபத்திலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கின்றனர்? அந்த மர்மமான நிகழ்வுகள் என்னென்ன? என்பதுதான் இந்த படத்தின் கதை என ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகரன், சாந்தினி, ஹரிஷ் பெராடி, பிரதாப் போத்தன், சென்றாயன், விஜி, வேலு பிரபாகரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தில் பிரபாதீஸ் ஷாம் என்பவர் இயக்கியுள்ளார். கோபி துரைசாமி ஒளிப்பதிவில், ரியாஸ் படத்தொகுப்பில், அச்சு ராஜாமணி இசையில் உருவாகிய இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.