close
Choose your channels

20 பிரபல நட்சத்திரங்கள் பாடிய "எண்ணம் போல் வாழ்க்கை' ஆல்பம்: யுவன்ஷங்கர் ராஜா வெளியீடு

Saturday, July 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் முதல் முதலாக 20க்கும் மேற்பட்ட பிரபலங்கள் பாடும் ஆல்பம் ஒன்று தயாராக உள்ளது. இந்த ஆல்பத்தை யுவன் சங்கர் ராஜாவின் யு1 ரெக்கார்டு நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் TMJAவின் ’எண்ணம் போல் வாழ்க்கை’ என்ற ஆல்பம் தயாராகி உள்ளது. இந்த ஆல்பத்தை சசிகுமார், ஆர்யா, GVபிரகாஷ், சூரி, கிருஷ்ணா, அசோக்செல்வன், மகேந்திரன், யோகிபாபு, மைக்கேல், மஹத், குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், புகழ், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யாராஜேஷ், ஷெரின், ஜனனி, சஞ்சித்ஷெட்டி, ரைசா, சாக்‌ஷி அகர்வால், அதுல்யா, அம்மு அபிராமி உள்பட பலர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

குட்டி ஸ்டோரி புகழ் எட்வின் லூயிஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை கவிதா என்பவர் எழுதியுள்ளார். சாண்டி நடனம் அமைக்கும் இந்த பாடலுக்கு படத்தொகுப்பாளராக சாபு ஜோசப் என்பவர் பணிபுரிந்துள்ளார்

தற்போதைய கொரோனா காலத்தில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் உருவாகியிருக்கும் இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.