close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த முக்கிய அமைச்சர்

Friday, June 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். டார்ஜிலிங், டேராடூன், குர்ஷியாங் உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்திற்காக ரஜினிகாந்த் தொடர்ச்சியாக 40 நாட்கள் நடிக்க முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் எங்கு படப்பிடிப்பிற்கு சென்றாலும், அந்த பகுதியின் முக்கிய அரசியல்வாதிகள், அமைச்சர்கள் அவரை மரியாதை நிமித்தம் சந்திப்பது வழக்கமாக உள்ளது. இந்த நிகழ்வு அவர் 'கபாலி' படத்திற்காக மலேசியா சென்றபோதும் அந்நாட்டின் பிரதமர் ரஜினியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மேற்குவங்க மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ரஜினியுடன் அமைச்சர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.