close
Choose your channels

பிப்ரவரி 1ல் ரிலீஸ் ஆகும் ஐந்து திரைப்படங்கள் குறித்த ஒரு பார்வை

Sunday, January 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜனவரியில் ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' வெளியானதால் பல திரைப்படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி ஐந்து படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1. வந்தா ராஜாவாதான் வருவேன்: லைகா நிறுவனனத்தின் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேதரின் தெரசா, மகத், பிரபு, ரம்யாகிருஷ்ணன், நாசர், யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பால் ஊற்றும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த படத்திற்கு இலவச விளம்பரத்தை அளித்துள்ளது

2. சர்வம் தாளமயம்: 'மின்சார கனவு' படத்தை அடுத்து 20 வருடங்கள் கழித்து இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கிய இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், மஹிமா நம்பியார், காளிவெங்கட், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரிலீசுக்கு முன்னரே ஒருசில திரைப்பட விழாக்களில் இந்த படம் கலந்து கொண்டு பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

3. பேரன்பு: கற்றது தமிழ், தங்க மீன்கள் மற்றும் தரமணி ஆகிய மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் ராம் இயக்கிய அடுத்த படைப்பு. மம்முட்டி, அஞ்சலி நடிப்பில் மிக இயல்பான காட்சிகள், மிகையில்லா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

4. சகா: பசங்க , கோலி சோடா போன்ற படங்களில் நடித்த கிஷோர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் நடிப்பில், முருகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை செல்லி சினிமாஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார்.

5. பேய் எல்லாம் பாவம்: அரசு, டோனா சங்கர் நடிப்பில் தவமணி பாலகிருஷ்ணன் கதை, திரைக்கதை, வசனத்தில் அறிமுக இயக்குநர் தீபக் நாராயணன் இயக்கியிருக்கும் படம் 'பேய் எல்லாம் பாவம்'.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.