close
Choose your channels

ரஜினி-நெல்சனின் 'ஜெயிலர்' படத்தில் இந்த பிரபலங்களா?

Wednesday, July 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படம் ’ஜெய்லர்’. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானதை அடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் தற்போது அலிம் ஹக்கீம் என்ற பிரபல சிகை அலங்கார நிபுணர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூப்பர்ஸ்டார் ரஜினியின் சிகை அலங்காரத்தை இவர் கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஹைதராபாத்தில் உள்ள ஸ்டூடியோவில் ’ஜெயிலர்’ படத்திற்காக ஜெயில் செட் பிரமாண்டமாக நடைபெற்று வருவதாகவும் இந்த செட்டில் தான் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ரஜினியின் மகளாக நடிக்கும் பிரியங்கா மோகனுக்கு ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

'ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க வரும் நிலையில் இந்த படத்தின் வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. மொத்தத்தில் இந்த படத்தில் இணைந்துள்ள பிரபலங்களின் வரிசைகளை பார்க்கும்போது இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.