close
Choose your channels

மஞ்சுவாரியரை விடாமல் துரத்திய இளம்பெண்.. காரை நிறுத்தியவுடன் என்ன செய்தார் தெரியுமா?

Thursday, April 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை மஞ்சு வாரியர் காரை விடாமல் இளம்பெண் ஒருவர் துரத்திய நிலையில் மஞ்சு வாரியர் தனது காரை நிறுத்தி செய்த செயல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் ’அசுரன்’ மற்றும் ’துணிவு’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும் மேலும் சில தமிழ் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் மஞ்சு வாரியர் சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரை அடையாளம் கண்டு கொண்ட இளம்பெண் ஒருவர் அவருடைய காரை விடாமல் துரத்தி உள்ளார். இதை பார்த்த மஞ்சு வாரியர் உடனடியாக காரை நிறுத்த செய்து கண்ணாடியை இறக்கி அந்த பெண்ணிடம் ’ஏன் இப்படி பாலோ செய்கிறாய்? உனக்கு ஏதேனும் ஆகிவிட்டது என்றால் என்ன செய்வது? என்று அறிவுரை கூறினார்.

இதனை அடுத்து அந்த இளம் பெண் ’தன்னுடைய தாயார் உங்களுடைய மிகப்பெரிய ரசிகை என்றும் அவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் நீங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மஞ்சு வாரியர் அவருடைய அம்மாவின் மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டு நிச்சயம் உங்கள் அம்மாவிடம் பேசுகிறேன்’ என்று வாக்குறுதி கொடுத்தார்.



இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்களை மதிக்க தெரிந்த நடிகை என அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.