close
Choose your channels

லண்டன் மாப்பிள்ளையை திருமணம் செய்யும் தமிழ் நடிகை.. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்..!

Friday, September 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை லண்டன் மாப்பிள்ளையை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு ’வால்மீகி’ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு ’அய்யனார்’, ‘காதலுக்கு மரணம் இல்லை’ ’சூரிய நகரம்’ ’சண்டமாருதம்’ ’நேர்முகம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் அவர் பல மலையாள படங்களிலும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திரையுலகை விட்டு விலகிய அவர் துபாய் சென்றுவிட்டார். அங்கு அவர் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லண்டனை சேர்ந்த ஸ்ரீஜா என்பவரை மீரா நந்தன் திருமணம் செய்ய இருக்கிறார். பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்ட இந்த திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீஜா - மீரா நந்தன் திருமண நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மீரா நந்தனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திருமண தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.