close
Choose your channels

செல்லத்துக்கு இந்த கேம் கூட புரியல.. மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் ஓவியா..!

Friday, September 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் நடிகை ஓவியா. முதன்முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்கப்பட்டது ஓவியாவுக்கு தான் என்பதும், அதன் பிறகு தான் பல போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா மற்றும் ஜூலி இடையே ஏற்பட்ட பிரச்சனை, ஆரவ் உடன் உண்டான காதல் ஆகியவை காரணமாக ஒரு கட்டத்தில் ஓவியா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இருந்தாலும் கடந்த ஆறு சீசன்களில் மிகச் சிறந்த போட்டியாளர் என பார்வையாளர்கள் மத்தியில் புகழப்பட்டவர் ஓவியா ஒருவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் ஓவியா மீண்டும் கலந்து கொண்டுள்ளார். ஓவியா, ஜூலி மற்றும் சுஜா வருணி ஆகிய முதல் சீசனின் போட்டியாளர்கள் மூவரும் ஒரு அணியாகவும், ரித்விகா ஷாரிக் மற்றும் சென்ட்ராயன் ஆகிய 2வது சீசன் போட்டியாளர்கள் மூவரும் இன்னொரு அணியாகவும் விளையாட உள்ளனர்

வழக்கம் போல் இந்த நிகழ்ச்சியை பிரியங்கா கலகலப்பாக தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வரும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.