close
Choose your channels

'நம்ம தாசில்தார் சத்யபிரியாவா இது..? வாணிபோஜனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Sunday, May 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வாணி போஜன் தற்போது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருக்கும் நிலையில் அங்கிருந்தவாறு கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் சற்றுமுன் அவர் பதிவு செய்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமான நடிகை வாணி போஜன் அதன் பிறகு வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார் என்பதும் தற்போது அவர் 'பாயும் ஒளி நீ எனக்கு’ ’பகைவனுக்கு அருள்வாய்’ ’கேசினோ’ உள்பட சுமார் 10 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இவர் நடித்த ’தெய்வமகள்’ என்ற சீரியல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது என்பதும் இந்த சீரியலில் அவர் சத்யபிரியா என்ற தாசில்தார் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் சுமார் 2.5 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் வாணி போஜன் தற்போது இந்தோனேசியா சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அவர் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் கிளாமர் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களுக்கு ஒரு ரசிகர் ’நம்ம தாசில்தார் சத்யாவா இது? என்று கமெண்ட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.