close
Choose your channels

மீண்டும் சாதனைகளை தகர்க்க காத்திருக்கும் 'அடிச்சு தூக்கு'

Wednesday, January 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேலும், சென்னையில் மட்டும் ரூ.10 கோடிக்கும் மேலும் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. ரஜினியின் 'பேட்ட' படத்துடன் வெளியாகிய போதிலும் குடும்ப ஆடியன்ஸ்களின் ஆதரவால் திரையிட்ட அனைத்து இடங்களிலும் இந்த படம் வசூல் மழை பொழிந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படத்தின் வீடியோ பாட லை இன்று வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இன்று வெளியாகும் பாடல் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆன 'அடிச்சு தூக்கு' பாடல் என்பதையும் சற்றுமுன் சத்யஜோதி பிலிம்ஸ் இன்னொரு டுவீட்டில் தெரிவித்துள்ளது. இந்த பாடல் ஏற்கனவே யூடியூபில் பல சாதனைகளை தகர்த்த நிலையில் மீண்டும் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைக்க இன்று வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.