close
Choose your channels

பிரபுவை அடுத்து 'தளபதி 66' படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்!

Monday, May 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் நடிகர் பிரபு இணைந்தார் என்ற செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

தளபதி விஜய் நடிப்பில், தில்ராஜூ தயாரிப்பில், வம்சி இயக்கத்தில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 66’. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபு இணைந்ததாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது பிரகாஷ்ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகிய இருவரும் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபு மற்றும் ஜெயசுதா ஆகிய இருவரும் ராஷ்மிகா மந்தனாவின் அப்பா அம்மாவாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பிரகாஷ்ராஜ், விஜய்யின் மற்றொரு சகோதரர் ஆக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது . ஏற்கனவே விஜய்யின் சகோதரர்களில் ஒருவராக ஷாம் நடித்து வருவதாகவும், விஜய்யின் தந்தையாக சரத்குமார் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

மேலும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.