close
Choose your channels

7 வருடங்களுக்கு பின் விஜய் படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்ற டிவி நிறுவனம்.. 'கோட்' அப்டேட்..!

Friday, May 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரத்தை கவனிக்கும் பணியும் தொடங்கி விட்டதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

முதல் முறையாக விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணையும் படம் என்பதாலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யுடன் யுவன் சங்கர் ராஜா இணையும் படம் என்பதாலும், இரண்டு வேடங்களில் விஜய் நடித்து அசத்தும் படம் என்பதாலும் இந்த படத்தின் அனைத்து உரிமைகளும் மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது ‘கோட்’ படத்தின் சாட்டிலைட் ரிலீஸ் உரிமை குறித்த வியாபாரம் முடிந்து விட்டதாகவும் ‘கோட்’ சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை ஜீ டிவி நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் விஜய் நடித்த ’மெர்சல்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீடிவி நிறுவனம் பெற்ற நிலையில் அதன்பின்னர் 7 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய்யின் ‘கோட்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் அடுத்தடுத்த பிசினஸ் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.