close
Choose your channels

இன்று முதல் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு.. முதல் ஷெட்யூலில் மாஸ் செய்யும் ஆதிக் ரவிச்சந்திரன்..!

Friday, May 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’குட் பேட் அக்லி’ என்ற படத்தின் அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் நேற்று சென்னையில் இந்த படத்தின் பூஜை மிக எளிமையாக நடந்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் முதல் ஷெட்யூலில் என்னென்ன காட்சிகள் படமாக திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று தொடங்க உள்ளது. இந்த படப்பிடிப்பில் இரண்டு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் ஒன்று அஜித்தின் இண்ட்ரோ பாடல் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் அடுத்ததாக ஒரு அதிரடி ஆக்சன் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் அஜித் மூன்று வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க இருப்பதை அடுத்து இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தமிழ் சினிமாவில் இல்லாத வகையில் இருக்கும் என்றும் அதற்கான செட் அமைக்கும் பணி இப்போதே தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தில் வில்லன்களாக பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் ‘ஜெயிலர்’ நடிகர் சுனில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் நாயகியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

மேலும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த உடன் அஜித் ’விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos