close
Choose your channels

93 வயதில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஏஜிங் சூப்பர் ஸ்டார்.. வைரல் புகைப்படங்கள்..!

Tuesday, August 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

93 வயதில் தமிழ் நடிகர் ஒருவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சில்வர் ஜூப்ளி ஸ்டார் மைக் மோகன் கடந்த 80 களில் பல வெள்ளிவிழா திரைப்படங்கள் கொடுத்த நிலையில் மீண்டும் அவர் ’ஹரா’ என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகிறார் என்பதை பார்த்தோம்..

இந்த படத்தில் மோகனுடன் குஷ்பூ, யோகி பாபு, மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், உள்பட பலர் நடித்து வரும் நிலையில் விஜய் ஸ்ரீ இந்த படத்தை இயக்கி வருகிறார்

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே நடிகர் சாருஹாசன் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது

உலகநாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் ஏற்கனவே விஜய் ஸ்ரீ இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’தாதா 87’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் ’ஹரா’ படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அவர் மோகன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos