close
Choose your channels

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நான் சிரித்தால்' டிரைலரில் விஜய், அஜித் ரெஃப்ரன்ஸ்!

Saturday, January 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ’மீசையை முறுக்கு’ மற்றும் ’நட்பே துணை’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது ’நான் சிரித்தால்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரானா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

நாயகன் ஆதிக்கு சிரிக்கும் வியாதி இருப்பதால் அந்த வியாதி காரணமாக அவர் சீரியஸான நேரத்திலும் சிரிக்கின்றார். இதனால் அவருக்கு நேரும் பிரச்சனைகளை காமெடியாக சொல்லும் படம் தான் ’நான் சிரித்தால்’ என்ற படத்தின் கதை என்பது இந்த ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் அஜீத் மற்றும் விஜய் ரெஃப்ரன்ஸ் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்த ’மெர்சல்’ திரைப்படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் போது அந்த படத்தை பார்க்கும் ஆதி, அதில் ஒரு எமோஷன் காட்சியில் விஜய் நடித்த போது வழக்கமான சிரிக்கும் நோயால் ஹிப் ஹாப் தமிழா ஆதி சிரிக்கிறார். அதனால் படம் பார்ப்பவர்கள் அவரை வினோதமாக பார்க்கின்றனர். அதேபோல் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்தின் மகள் ’எனக்கு இந்த உலகத்திலேயே பிடிக்காத ஒருவர் எனது அப்பாதான்’ என்று கூறும் வசனம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் போது அந்தக் காட்சிக்கும் ஆதி வழக்கம்போல் சிரிக்கிறார். இதனால் ஆதி பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அஜித் ரசிகர் ஒருவர் அவரை கோபமுடன் பார்க்கும் வகையில் உள்ள காட்சி இந்த டிரைலரில் இடம் பெற்று உள்ளது.

இந்த காட்சிகள் திரையரங்கில் ஓடும்போது அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடம் இருந்து என்ன மாதிரியான ரியாக்சன் வெளிவருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.