close
Choose your channels

'வலிமை' திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Friday, December 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்காக இரண்டு வருடங்கள் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆக்சன் விருது கிடைக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ஏற்கனவே விற்பனை ஆகி விட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ஒவ்வொரு ஏரியாவுக்கும் இந்த படத்தை விற்பனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’வலிமை’ திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை குறித்த வியாபார தகவல் அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது. ’வலிமை’ படத்தின் வெளிநாட்டு உரிமையை ’யுனைடெட் இந்தியா எக்ஸ்போட்டர்ஸ்’ என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பகிரப்பட்டுள்ளது என்பதும், உலகம் முழுவதும் இந்த படத்தை பிரமாண்டமாக அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியிட அந்நிறுவனம் தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.