close
Choose your channels

உலக பைக் டூரின்போது திரையுலக பிரபலத்தையும் அழைத்து சென்ற அஜித்.. இதுதான் காரணமா?

Saturday, April 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் தற்போது உலக பைக் டூரில் இருக்கிறார் என்பதும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேபாளில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அஜித் தன்னுடன் திரையுலக பிரபலம் ஒருவரையும் அழைத்துச் சென்றுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் கடந்த சில மாதங்களாக உலக அளவில் பைக் டூர் செல்லும் ஆசையை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் தற்போது உலக பைக் டூரின் ஒரு பகுதியாக நேபாளம் சென்றிருக்கும் நிலையில் அங்கிருந்து அவர் வேறு சில நாடுகளுக்கு பைக்கில் செல்ல திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் அஜித்தின் பைக் டூர் என்பது அவருடைய வாழ்நாள் சாதனையாக கருதப்படுவதால் அதை படம் பிடிக்க அவர் ஆசைப்படுவதாகவும் அதனால் அவருடன் பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும் சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜித்தின் உலக பைக் டூரின் போது முக்கிய காட்சிகளை அவர் படம் பிடித்து வருவதாகவும் இந்த படங்களின் தொகுப்பை வைத்து ’அஜித் உலக பைக் டூர்’ என்ற ஆவணப்படம் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.