close
Choose your channels

ஒருவழியாக வருகிறது 'ஏகே 62' அப்டேட்.. அஜித் ரசிகர்கள் குஷி..!

Saturday, April 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்க இருக்கும் ’ஏகே 62’ என்ற படத்தின் அப்டேட் அவருடைய பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.

அஜீத் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகி விட்ட நிலையில் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என்று கூறப்பட்டது.

மகிழ்திருமேனி இந்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் இருக்கிறார் என்றும் அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்விலும் பிஸியாக இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அஜித் தற்போது உலக பைக் டூர் சென்றிருக்கும் நிலையில் அஜித்தின் பிறந்த நாளான மே 1அம் தேதி அவருடைய ’ஏகே 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் அறிவிக்கும் என்று சமூகவலைதளங்களில் நம்பத் தகுந்த ஒரு சிலர் பதிவு செய்துள்ளனர்.

இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மே ஒன்றாம் தேதி அஜித் ரசிகர்களுக்கு அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டம் மட்டுமின்றி அவருடைய அடுத்த பட அறிவிப்பும் இருக்கும் என்பதால் குஷி ஆகி உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos