close
Choose your channels

ஸ்ரீதேவிக்காக கொள்கையை விட்டுக்கொடுத்த அஜித்!

Thursday, February 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் என்றாலே நல்ல நடிகர், மனிதநேயம் உள்ளவர் என்பது மட்டுமின்றி அவர் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாதவர், எந்த ஊடகத்திற்கும் பேட்டி தராதவர் ஆகியவையும் நினைவுக்கு வருவதுண்டு

அந்த வகையில் அஜித்தின் குடும்ப நண்பர்களில் ஒருவராகிய ஸ்ரீதேவியின் ஓராண்டு நினைவு தினமான இன்று, சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள போனி கபூர் இல்லத்தில் ஸ்ரீதேவியின் திதி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டார். எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத அஜித் தனது கொள்கையை விட்டுக்கொடுத்து ஸ்ரீதேவி மீது வைத்திருந்த மரியாதைக்காக இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது

ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து வரும் 'தல 59' மற்றும் 'தல 60' ஆகிய இரண்டு படங்களில் அஜித் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.