close
Choose your channels

அஜித், விஜய்யின் 90களின் நாயகி சங்கவிக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படங்கள்..!

Friday, March 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், விஜய் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை சங்கவியின் மகள் புகைப்படம் அவருடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சங்கவிக்கு இவ்வளவு பெரிய மகளா? என்று ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

அஜித் நடித்த முதல் திரைப்படமான ’அமராவதி’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகி ஆக அறிமுகமானவர் நடிகை சங்கவி. அதன் பிறகு விஜய் நடித்த ’ரசிகன்’ ’விஷ்ணு’ ’கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘கொளஞ்சி’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சங்கவி கடந்த 2016 ஆம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியர் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சங்கவி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரு நிலையில் சமீபத்தில் அவர் தனது மகளுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நடிகை சங்கவிக்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.