close
Choose your channels

ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட சொல்லி கொடுத்த முதலமைச்சர்.. முதல் பந்திலேயே சிக்சர்...!

Tuesday, December 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவுக்கு அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அதில் ரோஜா இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அதில் கிரிக்கெட் விளையாடினார்.

அப்போது அருகில் இருந்த ரோஜாவிடம் பேட்டை கொடுத்து நீங்களும் விளையாடுங்கள் என்று கூற, அதற்கு ரோஜா எனக்கு விளையாட தெரியாது என்று கூறினார். உடனே அவர் ’நான் சொல்லி தருகிறேன்’ என்று கூறியதோடு கிரீஸில் எப்படி நிற்க வேண்டும், பேட்டை எப்படி பிடிக்க வேண்டும் என்று அவருக்கு சொல்லி கொடுத்தார்.

இதனை அடுத்து ரோஜா முதல் பந்தை எதிர்கொண்ட நிலையில் அந்த பந்து சிக்ஸருக்கு பறந்தது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.