close
Choose your channels

வெற்றிப்பட இயக்குனரின் வெப்தொடரில் இணைந்த அஞ்சலி!

Saturday, December 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் இயக்கும் வெப்தொடரில் நடிகை அஞ்சலி இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராம் இயக்கிய ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஞ்சலி, அதன்பின் ’எங்கேயும் எப்போதும்’ ’அங்காடி தெரு’ உள்ளிட்ட படங்களில் போல்டான கேரக்டரில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மீண்டும் ராம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் அஞ்சலி நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தை ’மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஷால் நடித்த ’தீராத விளையாட்டு பிள்ளை’ ’சமர்’ ’நான் சிகப்பு மனிதன்’ ஆகிய தொடர் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் திரு இயக்கத்தில் உருவாகும் வெப்தொடர் ஒன்றில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஜான்சி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தொடரை நடிகர் கிருஷ்ணா தயாரித்து வருகிறார் என்பதும் இந்த தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்களை அஞ்சலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.