close
Choose your channels

ரஜினியின் 'அண்ணாத்த' அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

Saturday, December 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தனது அரசியல் வருகையை உறுதி செய்த போது ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40% இருப்பதாகவும் அவற்றை விரைவில் முடித்துக் கொடுக்க திட்டமிட்டு இருந்ததாகவும் கூறினார்

அந்த வகையில் தற்போது ’அண்ணாத்த’ படக்குழுவினர்களிடம் இருந்து வந்த தகவலின்படி டிசம்பர் 15 முதல் ’அண்ணாத்த’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக தெரிகிறது. இதற்காக செட் அமைக்கும் பணி ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுவதாகவும் டிசம்பர் 15 முதல் தொடங்கும் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்க உள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.