close
Choose your channels

அருள்நிதியின் அடுத்த படத்தில் இணையும் வெற்றிமாறன்

Monday, July 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’வம்சம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அருள்நிதி அந்த படத்தின் வெற்றியை அடுத்து ’மௌனகுரு’ படத்தின் மூலம் அனைவராலும் நல்ல நடிகர் என்று அறியப்பட்டார். அதன்பின் ’தகராறு’ ’டிமான்டி காலனி’ ’ஆறாது சினம்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் அருள்நிதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படமும், ’களத்தில் சந்திப்போம்’ என்ற திரைப்படத்திலும் அருள்நிதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அருள்நிதியின் 14வது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அருள்நிதி நடிக்கும் 14வது படத்தின் டைட்டில் நாளை மதியம் 12 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் டைட்டிலை இயக்குனர் வெற்றிமாறன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தை இன்னாசி பாண்டியன் இயக்க உள்ளார். இவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து, இயக்குனர் அறிவழகன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பதும், ’கோப்ரா’ படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ரான் எதான் யோஹனன் இசையமைக்க உள்ளார். இவர் ஏற்கனவே ‘மாயா’, ’நரகாசுரன்’ உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.