close
Choose your channels

பொங்கல் போட்டியில் இணைந்தது அருள்நிதியின் 'ஆறாது சினம்'

Monday, January 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. கடந்த வருடம் இவர் நடித்த 'டிமாண்டி காலனி' நல்ல வரவேற்பையும், 'நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்' என்ற படம் சுமாரான வரவேற்பையும் பெற்ற நிலையில் தற்போது 'ஈரம்' இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 'ஆறாது சினம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் வெளியாகி கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட 'த்ரிஷ்யம்' படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கிய 'மெமரீஸ்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படம்தான் இந்த 'ஆறாது சினம்' படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அருள்நிதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா தத் ராதாரவி, அனுபமாகுமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைத்து வரும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.