close
Choose your channels

ஐந்தே படங்கள்.. அட்லிக்கு திறந்தது அம்பானி வீட்டு கதவு..!

Wednesday, September 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐந்தே படங்கள் மட்டும் இயக்கிய இயக்குனர் அட்லி தற்போது அகில இந்திய அளவில் புகழ் பெற்றுள்ள நிலையில் பிரபல தொழிலதிபர் அம்பானியின் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பது கோலிவுட் திரை உலகிற்கு பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி, ஆர்யா, நயன்தாரா நடித்த ’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் தற்போது ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படத்தையும் இயக்கி ரிலீஸ் செய்துள்ளார் என்பதும் இந்த படம் ரூ.1000 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐந்தே படங்கள் இயக்கி அகில இந்திய அளவில் புகழ் பெற்றுள்ள அட்லி, தொழிலதிபர் அம்பானி வீட்டில் சமீபத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக அறிவிக்கப்பட்டார். இந்த விழாவில் அவர் தனது மனைவி பிரியாவுடன் கலந்து கொண்டார்.

மேலும் இந்த விழாவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு தம்பதிகள் இந்த விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.