close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு.. முக்கிய கேரக்டரில் 'பீஸ்ட்' நாயகி..!

Friday, December 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு படம் தயாரிக்க இருக்கும் நிலையில் அதில் முக்கிய கேரக்டரில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஏவிஎம் நிறுவனம் திரைப்படத் தொழிலில் கொடி கட்டி பறந்தது என்பது இருப்பினும் சில ஆண்டுகளாக அந்நிறுவனம் தயாரிப்பு தொழிலை நிறுத்தி வைத்திருந்தது என்பது சினிமா ரசிகர்களுக்கு தெரிந்ததே. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பின் தற்போது ஏவிஎம் நிறுவனம் ஓடிடி தளத்திற்காக ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்தை ’கோப்ரா’ பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கதை நாயகிக்கு முக்கியத்துவம் இருப்பதாக கூறப்படும் நிலையில் பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி இருப்பதாகவும், மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்ட வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.