close
Choose your channels

கருப்பு கடவுள் காஸ்ட்யூமில் பிக்பாஸ் ஸ்ருதி: வேற லெவலில் வைரல்

Thursday, October 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடவுள் என்றாலே வண்ண வண்ண நிறங்களில் தான் இருப்பார்கள் என நமக்கு சிறுவயதிலிருந்தே முன்னோர்கள் சொல்லி கொடுத்து இருந்த நிலையில் கருப்பு நிறத்தில் கடவுள் இருப்பதாக போட்டோ ஷூட் எடுத்த பிக்பாஸ் சுருதியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சுருதி ஜெயதேவன் நேற்று தனது சோகக் கதையைக் கூறினார். தனது அம்மா 18 வயதில் திருமணம் செய்து கொண்டார் என்றும் அம்மாவுக்கு திருமணம் நடந்தபோது அவரது கணவருக்கு 50 வயது என்றும் தனது அம்மாவிற்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் தன்னுடைய அப்பாவை, அப்பா என்று ஒரு நாள் கூட தான் கூப்பிட்டதில்லை என்றும் அவர் இறந்த நாளில் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அந்த அளவுக்கு அப்பாவால் தான் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் கண்ணீருடன் கூறிய கதை அனைவரையும் கலங்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாடலான சுருதி, லட்சுமிதேவி கடவுள் போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. லட்சுமி கடவுள் என்றாலே வெள்ளை வெளேரென இருப்பதை தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் கருப்பு நிறத்தில் லட்சுமி தேவியின் புகைப்பட போஸ் கொடுத்திருந்த சுருதியின் புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இன்னும் நிறைவேறி கொழுந்துவிட்டு எரியும் நிலையில் இந்த காலண்டர் புகைப்படம் உலகம் முழுவதும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல மாடர்ன் உடைகளில் அவர் போஸ் கொடுத்து உள்ளார் என்பதும் அந்த புகைப்படங்களை தேடி எடுத்து தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.